‘தற்கொலை படை என பேசிய’அரியலூர் மாவட்ட பாஜ தலைவர் கைது

திருச்சி: பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், ‘‘தற்கொலை படை தாக்குதல் கூட நடத்த தயாராக இருக்கிறோம்’’ என பேசிய அரியலூர் பாஜ மாவட்ட தலைவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா பகுதியில் கடந்த 1ம்தேதி பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட பாஜ தலைவர் ஐயப்பன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஐயப்பன் பேசுகையில்,‘‘ஒரு வாரத்திற்குள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்காவிட்டால், தற்கொலை படை தாக்குதல் கூட நடத்த தயாராக’’ இருக்கிறோம் என்றார். இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அரியலூர் போலீசார் பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசியதாகவும், வன்முறையை தூண்டுவதாகவும் ஐயப்பன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில் நேற்று காலை ஜெயங்கொண்டம் வேலாயுத நகரில் வீட்டில் ஐயப்பன் கைது செய்யப்பட்டார். இதில் கைதான ஐயப்பன், அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகர், ஐயப்பனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: