தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் முற்றோதல் போட்டி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் உதவி இயக்குநர் சந்தானலட்சுமி தலைமையில் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு எனும் திட்டம் மூலம் திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவர்களில் பரிசுக்குரியவர்களை தேர்ந்தெடுக்க திறனறித் தேர்வும் மற்றும் ஜவகர்லால் நேரு பிறந்த நாளுக்கான கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் சிறுவானூர் கண்டிகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவன் செ.ஹேம்நாத், திருவெள்ளவாயல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் வெ.சந்தோஷ், சத்தரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி து.லோகிதா, மீஞ்சூர் சகாயமாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சீ.நிவேதா, வேடங்கிநல்லூர் ஸ்ரீநிகேதன் பாடசாலா பள்ளி மாணவிகள் செ.லக்ஷனா, இர.காவ்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், ஜவகர்லால் நேரு பிறந்தநாள் தொடர்பான கல்லூரி மாணவர்களுக்கிடையே பேச்சுப்போட்டியில் 6 பேர் கலந்துகொண்டனர். இதில் முதல் பரிசுத்தொகை ரூ.5 ஆயிரம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரி மாணவர் வெ.த.கணபதி, 2ம் பரிசுத் தொகை ரூ.3 ஆயிரம் பூந்தமல்லி டி.எம்.ஐ.பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி மோ.ஸ்ரீமதி மற்றும் 3ம் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் பட்டாபிராம் டிஆர்பிசிசி இந்துக் கல்லூரி மாணவி சு.சுரேகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: