மாற்றுத்திறனாளிகள் தின விழா: கலெக்டர் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, `சமவாய்ப்பும், முழு பங்கேற்பும் எந்த ஒரு தடையுமின்றி அனைத்து மாற்றுத்திறனாளிகளும் நிறைவாய் பெற வேண்டும்’ என்றார். தொடர்ந்து இரண்டு காதுகேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தலா ரூ.3200 வீதம் ரூ.12800 மதிப்பிலான 4 காதொலி கருவிகளை விலையின்றி வழங்கினார்.

மேலும், தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது மாற்றுத்திறனாளியான சோட்டு என்ற மாணவனை ஊக்கப்படுத்தும் வகையில், அந்த மாணவனை பாராட்டி ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கைப்பந்து, டீ-சர்ட், பேன்ட் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களையும் பரிசாக வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ், நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் காதுகேளாதோருக்கான சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: