2வது கட்டமாக டெல்லியில் மேலும் 1.40 லட்சம் சிசிடிவி: உலகளவில் நம்பர்-1

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்து 2.75 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டமாக 1.40 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். கணக்கெடுப்புகளின்படி, சதுர மைல் அளவில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ள உலகில் உள்ள 150 நகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.

டெல்லியில் ஒரு சதுர மைலுக்கு 1826 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. லண்டன் 2வது இடத்தில் இருக்கின்றது. இங்கு ஒரு சதுர மைலுக்கு 1138 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சென்னையை காட்டிலும் மூன்று மடங்கும், மும்பையை காட்டிலும் 11 மடங்கு அதிகமாகவும் டெல்லியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பெண்கள் பாதுகாப்பு மேம்பாட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: