ஒன்றிய அமைச்சர் விளக்கம் பூஸ்டர் தடுப்பூசி எப்போது?

புதுடெல்லி: அறிவியல்பூர்வ அறிவுரைப்படியே பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி தரப்படும் என மக்களவையில் ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறி உள்ளார். இந்தியாவில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து தகவல்களை மக்களவையில் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று விளக்கினார். அவர் கூறியதாவது:

‘ஆபத்து நாடுகள்’ என வகைப்படுத்தப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வந்த 16 ஆயிரம் பேரிடம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த வகை வைரஸ் பாதிப்பு என்பதை கண்டறிய மரபணு வகைப்படுத்தும் ஆய்வுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து, அறிவியல்பூர்வ அறிவுரைகளின்படி முடிவு எடுக்கப்படும்.  புதிய வகை வைரசை எதிர்கொள்ள போதுமான மருத்துவ வசதிகள், கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளன. இந்த விஷயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

காலாவதி காலம் நீட்டிப்பு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கான காலாவதி காலத்தை இந்திய மருந்து தர நிறுவனம் நீட்டித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

கோவாக்சின்    12 மாதம்

கோவிஷீல்டு    9 மாதம்

சைகோவ்-டி     6 மாதம்

Related Stories:

More