குஜராத்துக்கு புதிய காங். தலைவர்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில தலைவராக ஜகதீஷ் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.  குஜராத் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக அமித் சவ்தா இருந்த வந்தார். இந்நிலையில் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநில தலைவரை கட்சியின் மேலிடம் மாற்றியுள்ளது. புதிய மாநில தலைவராக ஜகதீஷ் தாகூரை நியமித்து கட்சியின் தலைவர் சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஜகதீஷ் தாகூரை நியமித்து காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. முன்னாள் தலைவர் அமித் சவ்தாவின் பங்களிப்பை கட்சி வெகுவாக பாராட்டுகின்றது,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

More