கடந்தாண்டில் ஏடிஎம்.மில் எடுத்ததை விட செல்போனில் அதிக பண பரிவர்த்தனை: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஏடிஎம்மில் பணம் எடுத்ததை விட, செல்போன் மூலம் பண பரிவர்த்தனை அதிகமாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பின்டெக் தொடர்பான இன்பினிட்டி அமைப்பை பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

பின்டெக் தொழில்துறையானது மிகப்பெரிய அளவில் சாதனைகளை படைத்துள்ளது. மக்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மையை கண்டறிந்துள்ளது. பின்டெக் முயற்சிகள் அனைத்தையும் புரட்சியாக மாற்றப்பட வேண்டிய நேரம் இதுவாகும். இந்த புரட்சியானது நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நிதி ஆதாரத்தை உறுதி செய்வதற்கு உதவும். இந்த தொழில்நுட்பமானது நிதித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏடிஎம்களில் பணம் எடுப்பதை விட, மொபைல் போனில் பணம் செலுத்திய எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அனைத்து வங்கிகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது என்பது ஏற்கனவே நிரூபணமாகி உள்ளது.  தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்தியா யாருக்கும் இரண்டாம் இடத்தில் இல்லை என்பதை நிரூபித்துள்ளது. டிஜிட்டல் இந்தியாவின் கீழ் மாற்றத்திற்கான முன்முயற்சிகள் புதுமையான பின்டெக் தீர்வுகளுக்கான கதவுகளை திறந்துள்ளது.  

* கடந்த 7 ஆண்டுகளில் ஜன்தன் கணக்குகள் மூலமாக 43 கோடி பேர் வங்கி கணக்கை தொடங்கியுள்ளனர்.

* கடந்தாண்டு 69 கோடி ரூபே கார்டுகள் மூலம் 130 கோடி பரிவர் த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் மட்டும் யூபிஐ மூலமாக 42 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளது.

* ஜிஎஸ்டி போர்டலில் 30 கோடி இன்வாய்ஸ் பதிவேற்றப்பட்டுள்ளது.  இவ்வாறு மோடி பேசினார்.

Related Stories:

More