போர்க் கப்பல்களில் கூடுதல் பெண் அதிகாரிகள் நியமனம்: கடற்படை தளபதி அறிவிப்பு

புதுடெல்லி: ‘சீனா உடனான வடக்கு எல்லையில் நாட்டின் பாதுகாப்பு சூழல் சிக்கலாகதான் இருக்கிறது,’ என்று கடற்படை தளபதி ஹரி குமார் கவலை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் நேற்று கடற்படை தளபதி ஹரி குமார் அளித்த பேட்டி வருமாறு:கடற்படையில் பெண்களை சேர்ப்பதற்கும், முக்கிய பதவிகள் மற்றும் பொறுப்புக்களை பெண் அதிகாரிகளுக்கு வழங்குவதற்கும் கடற்படை தயாராக இருக்கிறது. இதுவரையில் கடற்படையின் முக்கிய 15 போர் கப்பல்களில் 28 பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மிக விரைவில் அதிகரிக்கும்.

சீனா உடனான வடக்கு எல்லை நிலவரமும்,  கொரோனா பரவுதலும் 2 சிக்கலான சவால்களை கடற்படைக்கு அளித்துள்ளது. வடக்கு  எல்லையில் நாட்டின் பாதுகாப்பு சூழல் சிக்கலாகதான் இருக்கிறது.  இருப்பினும், எந்த சவாலையும் எதிர்கொள்வதற்கு கடற்படை தயார்நிலையில்  இருக்கிறது. போருக்கு தயார்நிலையில் கடற்படை இருப்பதால், இந்தியாவின் கடல்  எல்லைக்குள் எந்த அத்துமீறலுக்கும் இடம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More