தமிழகத்தில் 711 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் நேற்று 1,02,673 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 711 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27,29,061 ஆக உள்ளது. நேற்று 759 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26,84,450. சிகிச்சை பெற்று வந்தவர்களில் அதிகபட்சமாக சேலத்தில் 3 பேர், சென்னை, கோவை, காஞ்சிபுரம், நீலகிரி, திருவள்ளூர், தூத்துக்குடியில் தலா 1 என 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 36,513 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் இருப்பவர்கள் 8,098 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 128 பேர், கோவையில் 127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே உள்ளது.

Related Stories:

More