போலி பத்திரம் தயாரித்து மூதாட்டியின் வீட்டு மனையை அபகரிக்க முயன்றவர் கைது

சென்னை: சூளைமேடு பகுதியை சேர்ந்த ராஜம் (60), தனக்கு சொந்தமான வீட்டு மனையை விற்பனை செய்யும்படி கடந்த ஆண்டு முகப்பேரை சேர்ந்த தென்றல் ராஜாவிடம் (54) கூறியுள்ளார்.  அப்போது, அந்த நிலத்தின் ஆவண நகலை பெற்ற தென்றல் ராஜா, தனது கூட்டாளியான ஆவடியை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து, ராஜம் பெயரில் போலி பத்திரம் தயாரித்து, அந்த இடத்தை ராஜேஸ்வரி என்பவரிடம் விற்று, முதல் தவணையாக ₹15 லட்சத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவானார்.  

இதனையடுத்து, அந்த இடத்தை நொளம்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், தனது பெயரில் பதிவு செய்ய ராஜேஸ்வரி சென்றபோது, அது போலி பத்திரம் எனத் தெரியவந்தது. இதுகுறித்து, நொளம்பூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு தென்றல் ராஜாவை கைது செய்தனர். தலைமறைவான ராஜேஷை தேடி வருகின்றனர்.

Related Stories: