பள்ளி கழிவறையில் குடிபுகுந்த பாம்புகள்: மாணவர்கள் அலறி ஓட்டம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 400 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு நேற்று காலை சில மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துகொண்டிருந்தனர். அப்போது சில மாணவர்கள், அருகே உள்ள கழிவறைக்கு சென்றனர். அங்கு சுமார் ஐந்து பாம்புகள் ஒன்றாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து பாம்பு, பாம்பு என கூச்சலிட்டபடி அலறியடித்து ஓடினர்.

ஆசிரியர்கள், மாணவர்கள் யாரையும் அருகில் செல்லவிடாமல் பார்த்துக்கொண்டனர். பின்னர் மாணவர்கள் இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் வீரமணியிடம் தெரிவித்தனர். அதன்பின் தலைமையாசிரியர் மாணவர்களின் நலன் கருதி மிகவும் துரிதமாக செயல்பட்டு சுமார் ஐந்து பாம்புகளையும் அகற்றி செந்துறை தீயணைப்பு துறையிடம் புகார் அளித்தார்.

Related Stories:

More