போராட்ட களத்தில் உயிரிழந்த 700 விவசாயிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி: விவசாயிகள் போராட்டத்தின் போது உயிர் தியாகம் செய்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வெளியிட்டார். பின்னர் பேசிய அவர்; விவசாயிகள் போராட்டத்தின் போது உயிர் தியாகம் செய்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காதது ஏன்? போராட்டக் களத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு இழப்பீடு தரும் திட்டம் இல்லை என்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.

போராட்டத்தில் உயிர்நீத்த 152 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீட்டை பஞ்சாப் அரசு தந்துள்ளது. உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் பஞ்சாப் அரசு உறுதியளித்துள்ளது. வேளாண் சட்டங்களை அமல்படுத்தி தவறு செய்ததாக மன்னிப்புக்கோரிய பிரதமர் நிவாரணம் தரமறுப்பது ஏன்?. போராட்டத்தில் இறந்த விவசாயிகள் குறித்த தகவல்களை காங்கிரஸ் கட்சி திரட்டியுள்ளது. மத்திய அரசு உண்மையா மூடி மறைக்கிறது. உயிரிழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.

Related Stories:

More