மார்க்சிஸ்ட் நிர்வாகி வெட்டிக் கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் திருவல்லா அருகே பெரிங்கரை பகுதியை சேர்ந்தவர் சந்தீப்குமார் (32). மார்க்சிஸ்ட் பெரிங்கரை வட்ட செயலாளர் ஆவார். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் சந்தீப்குமார் வெளியே சென்றுவிட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். சாத்தங்கரிமுக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே 3 பைக்குகளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென சந்தீப்குமாரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியது.

மொத்தம் 11 இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது. இது குறித்து திருவல்லா போலீசார் வழக்கு பதிந்து,  தப்பி ஓடிய கும்பலில் ஜிஷ்ணு, பிரமோத், நந்து, முகம்மது பைசல் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More