‘ஜவாத்’ புயலால் ரயில்கள் ரத்து

சென்னை: ஜவாத் புயலால், சென்னை - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து  தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னை சென்ட்ரலில் இருந்து, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு இன்று இயக்கப்பட வேண்டிய, ஹவுரா மற்றும் கொரமண்டல் சூப்பர் பாஸ்ட் ரயில்கள், புயலால் பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் - புவனேஸ்வர் வாராந்திர ரயிலும், திருச்சி - ஹவுரா இடையே வாரம் இரண்டு நாட்கள் இயங்கும் சூப்பர்பாஸ்ட் ரயிலும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரவேண்டிய, புவனேஸ்வர் - ராமேஸ்வரம், புருலியா - விழுப்புரம், ஹவுரா - சென்னை சென்ட்ரல், சில்சார் - திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட் ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன’ எனக்கூறப்பட்டுள்ளது.

Related Stories: