இனி 1-8ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள்!: ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை..!!

சென்னை: ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* 1 முதல் 8ம் வகுப்பு வரை கண்டிப்பாக சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள் நடைபெற வேண்டும்.

* பள்ளிகளில் வகுப்புகள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நடத்தலாம்.

* பள்ளிக்குள் நுழையும் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டு, அதிக வெப்பநிலை இருப்போரை அனுமதிக்கக்கூடாது.

* மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்வதுடன், ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன் மாதிரியாக திகழ வேண்டும்.

* மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது, சமூக இடைவெளி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.

* தளவாடப் பொருட்கள், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் போற்றவற்றை சுத்தம் செய்து கிருமிநீக்கம் செய்ய வேண்டும்.

* கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறை வணக்கம், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.

* பள்ளிகளில் நீச்சல் குளம் இருப்பின் அதனை மூட வேண்டும்.

* நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக்கூடாது.

அரசின் வழிகாட்டுதல்களை அனைத்து வகை பள்ளிகளிலும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. 

Related Stories:

More