பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளை மூட உத்தரவிட வேண்டுமா?: டெல்லி காற்று மாசு வழக்கில் உ.பி. வாதத்திற்கு தலைமை நீதிபதி விமர்சனம்..!!

டெல்லி: டெல்லியில் நிலவும் காற்று மாசுக்கு பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசே காரணம் என்று உத்திரபிரதேச மாநிலம் வைத்த வாதத்தை உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உத்திரப்பிரதேச மாநிலம் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார், டெல்லியில் நிலவும் காற்று மாசுக்கு உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகள் காரணம் அல்ல என குறிப்பிட்டார்.

உத்திரப்பிரதேசத்தில் இருந்து காற்றோட்டம் டெல்லி நோக்கி வீசாது என தெரிவித்த அவர், பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் மாசடைந்த காற்றே டெல்லி காற்று மாசுக்கு முக்கிய காரணம் என கூறினார். இதனால் உத்திரப்பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகளை மூட உத்தரவிட கூடாது என்றும் 8 மணி நேரங்கள் மட்டுமே இயங்க வேண்டும் என்று கூறுவது கரும்பு மற்றும் பால் தொழிற்சாலைகளை பெருமளவு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

அதற்கு கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.ஏ. ரமணா, இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளை மூட உத்தரவிட கூறுகிறீர்களா என விமர்சித்தார். டெல்லியில் மிகவும் ஆரோகியமற்ற முதல் அபாயமான அளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதை அடுத்து, காற்று மாசு ஏற்படுத்தும் வகையில் விதி மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லியை சுற்றியுள்ள அணுமின் நிலையங்கள் நெறிமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தரப்பு வழங்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார்.

Related Stories: