ஆலங்காயம் வாரச்சந்தையில் காய்கறிகள் விலை கிடு கிடு உயர்வு-கத்தரிக்காய் கிலோ ₹170க்கு விற்பனை

ஆலங்காயம் : ஆலங்காயம் வாரச்சந்தையில் காய்கறிகள் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது. கத்தரிக்காய் கிலோ ₹170க்கு விற்பனை செய்யப்பட்டது.  திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழை காரணமாக, காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொடர் விலை உயர்வால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஆலங்காயம் பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று நடைபெறும் சந்தையில், காய்கறிகள் மலிவான விலையில் விற்கப்படுவது வழக்கம்.  நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில், வழக்கத்திற்கு மாறாக, இந்த வாரம் காய்கறிகளின் விலை மிக அதிக விலைக்கு விற்கப்பட்டதால், பொதுமக்கள் காய்கறிகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி கடந்த வாரம் ₹120க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளியின் விலை நேற்று குறைந்து ₹50க்கு விற்பனை செய்யப்பட்டது. கத்தரிக்காய் முன்பு எப்போதும் இல்லாத விலையாய் 1 கிலோ ₹170க்கு விற்பனை செய்யப்பட்டது,  வெங்காயம் 1 கிலோ ₹60க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: