அணவயல் அரசு பள்ளி எதிரே சிதிலமடைந்த மின் கம்பங்கள் மாற்றம்

ஆலங்குடி : தினகரன் செய்தி எதிரொலியால் அணவயல் அரசு உயர்நிலைபள்ளி வாசலில் உள்ள மின்மாற்றியின் சிதிலமடைந்த சிமெண்ட் கம்பங்கள் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டது.

ஆலங்குடி அருகே அணவயல் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் இப்பள்ளியின் வாசல் அருகே உள்ள மின்மாற்றியின் சிமெண்ட் கம்பங்கள் சிதிலமடைந்து எழும்புக்கூடாக காட்சியளித்தது.

இதனால் அதிக பழுவதை தாங்கி நிற்கும் கம்பம் எப்போது விழுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவியது. மேலும் அப்பகுதி வழியாக சென்று வரும் மாணவர்களும் அச்சத்துடன் சென்று வந்தனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்ற செய்தி தினகரன் நாளிதழில் கடந்த 30ம்தேதி வெளியானது.இதன் எதிரொலியாக சேதமடைந்த மின்மாற்றியின் சிமெண்ட் கம்பங்களை உதவிமின் பொறியாளர் செல்லகணபதி (பொறுப்பு) தலைமையிலான எல்.என்.புரம் மின்சார வாரிய ஊழியர்கள் பழுதடைந்த கம்பங்களை நேற்று மற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: