குடந்தை புதிய பேருந்து நிலையம் அருகே பிடாரி குளம் சுற்று சுவர் இடிந்து விழும் அபாயம்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கும்பகோணம் : கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே பராமரிப்பின்றி உள்ள பிடாரி குளத்தை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பிடாரி குளம் மிகவும் தொன்மை வாய்ந்த குளமாக விளங்குகிறது. இக்குளத்தை சுற்றி பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கு தேவையான பழம் மற்றும் காய்கறி கடைகள் உள்ளது. இருப்பினும் அப்பகுதியை சுற்றி குடியிருப்பவர்கள் குளத்தில் குப்பைகளை கொட்டி அசுத்தமாக காணப்படுகிறது.

மேலும் மதுப்பிரியர்கள் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து எறிந்து செல்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் சரியான பராமரிப்பின்றி தூய்மையற்ற நிலையில் காணப்படுகிறது.இந்நிலையில் கடந்த 20 நாட்களாக கும்பகோணத்தில் பெய்த கனமழையால் குளத்தின் நீர் கொள்ளளவு முழுவதுமாக அதிகரித்து சுற்றுச்சுவர் வலுவிழந்து உடையும் நிலை காணப்பட்டது. எனவே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உடனடியாக சரி செய்ய கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: