கள்ளக்குறிச்சி நகராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்க புதிய இயந்திரம்-கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்கட்ட கேசவேலு நகர் பகுதியில் உயர்மட்ட  குடிநீர் தொட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு  வரும் தூய்மை பணிகள் மற்றும் நகராட்சி நிர்வாகத்தால் சேகரிக்கப்பட்டு  தேக்கி வைக்கப்பட்டுள்ள பழைய குப்பைகளை தரம் பிரிப்பதற்கு இயந்திரம்  அமைக்கும் பணியை கலெக்டர் தர் ஆய்வு செய்தார்.

இது குறித்து கலெக்டர் கூறியதாவது:

 கள்ளக்குறிச்சி நகராட்சி குப்பைகிடங்கில் நீண்ட நாட்களாக தேக்கி  வைக்கப்பட்ட 26,621 க.மீ குப்பை கிடங்கினை உயிரியல் செயலாக்கம் முறையில்  தரம் பிரித்து மட்கும் குப்பையை விவசாய பயன்பாட்டிற்கு வழங்கவும் மட்காத  குப்பையை சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கவும் ஏதுவாக புதிய இயந்திரம்  அமைக்கப்பட்டு வருகிறது.

இப்பணியினை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட  அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் மட்கும் குப்பைகள், மட்காத  குப்பைகள் என குப்பைகளை தரம் பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும் என்றார்.

அப்போது கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன்,  நகராட்சி பொறியாளர் பாரதி, துப்புரவு ஆய்வாளர் உமாசங்கர், பணி  மேற்பார்வையாளர் முகமதுசுபேர், நகர கட்டமைப்பு ஆய்வாளர் தாமரைசெல்வன்  ஆகியோர் உடனிருந்தனர். 

Related Stories: