×

கொரோனாவுக்கு முடிவு கட்ட வரும் 3ம் தடுப்பூசி!: தமிழ்நாட்டில் சைகோவ்-டி-யை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு அனுமதி..!!

டெல்லி: தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், 3வதாக சைகோவ்-டி என்ற தடுப்பூசி விரைவில் அறிமுகமாகவுள்ளது. கொரோனா 3வது அலையை தடுக்க அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசி 2 கட்டங்களாக செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு ஏற்கனவே முதற்கட்ட தடுப்பூசி போட்டவர்களுக்கு 2வது கட்டமாகவும், தடுப்பூசி போடாதவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 3வதாக சைகோவ்-டி என்ற பெயரில் தடுப்பூசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதற்கான அனுமதியை ஒன்றிய சுகாதாரத்துறை அளித்துள்ளது. முதற்கட்டமாக 11.6 லட்சம் டோஸ் சைகோவ்-டி தடுப்பூசிகள் விரைவில் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளன. ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் சைகோவ்-டி தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. அதிக மக்கள் முதல் டோஸ் செலுத்தாமல் உள்ள மாநிலங்களில் சைகோவ்-டி தடுப்பூசியை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இந்த தடுப்பூசி அறிமுகம் செய்யப்படவுள்ளது. பிகார், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம் மாநிலங்களிலும் விரைவில் சைகோவ்-டி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


Tags : Tamil Nadu, Psycho-D Vaccine, Union Health Department
× RELATED “மீண்டும் மோடி வென்றால் நாடே...