ஒடிசாவில் கண்களுக்கு விருந்து படைக்கும் சர்வேதேச மணற்சிற்ப திருவிழா!: பார்வையாளர்கள் பிரம்மிப்பு..!!

கொனார்க்: ஒடிசா மாநிலத்தில் தொடங்கியுள்ள சர்வேதேச மணற்சிற்ப திருவிழாவில் கலைஞர்கள் உருவாக்கியுள்ள சிற்பங்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றன. புரி மாவட்டத்தில் உள்ள சரித்திர புகழ் பெற்ற கொனார்க் கடற்கரையில் கடந்த 1ம் தேதி சர்வேதேச மணற்சிற்ப திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வரும் 5ம் தேதி வரை நடைபெறவுள்ள 5 நாட்கள் மணற்சிற்ப திருவிழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி இருக்கின்றனர். ஒடிசா, ராஜஸ்தான், மராட்டியம், குஜராத், மேற்குவங்கம், பிகார், ஜார்கண்ட், ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மணலை மலைக்க வைக்கும் சிற்பங்களாக உருவாக்கி காண்போரை பிரமிக்க வைத்துள்ளனர்.

மணற்சிற்ப திருவிழாவில் தினமும் வெவ்வேறு தலைப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் சிற்பங்களை கண்டு ரசிக்க நாடு முழுவதிலும் இருந்து பார்வையாளர்கள் கொனார்க் கடற்கரையில் குவிந்திருக்கின்றனர். கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து நடத்தப்படும் ஒடிசா சர்வேதேச மணற்சிற்ப திருவிழா, வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. இங்கு நடக்கும் அனைத்து காட்கிகள் மற்றும் மணல் சிற்பக்கலைகளை மக்கள் புகைப்படம் எடுத்து சென்றனர்.

Related Stories: