இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த நபருக்கும் கொரோனா தொற்று, மாதிரிகள் ஒமிக்ரான் சோதனைக்கு அனுப்பிவைப்பு: மா.சுப்பிரமணியன்

சென்னை: மிகுந்த எச்சரிக்கையோடு தமிழ்நாடு அரசு கையாண்டு வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். சர்வதேச விமான நிலையங்களில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 11 நாடுகளில் இருந்து மதுரை, கோவை, திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர். 6 அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த நபருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா உறுதியான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முழுமையான பரிசோதனை முடிவு வரும் வரை ஒமிக்ரான் உறுதி என எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: