டிசம்பர் 2வது வாரத்தில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை மையம்

சென்னை: அந்தமான் அருகே வங்கக்கடலில் டிசம்பர் 2வது வாரத்தில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தமிழகம் நோக்கி நகரும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. ஜாவத் புயல் நாளை காலை வடக்கு ஆந்திரா - ஒடிசா அருகே வரக்கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் ஜாவத் புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: