குளச்சலில் இருந்து விசைப்படகில் 60 பேர் இலங்கை தப்பினர்: 5 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது

குளச்சல்: குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் அருகில் இருந்து ஒரு விசைப்படகில் ஆண்கள், பெண்கள் உள்பட புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்கள் 60 பேர் இலங்கைக்கு திருட்டுத்தனமாக சென்றதாக கூறப்படுகிறது. தங்களது பயணத்துக்காக குளச்சல் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து குறைந்த விலையில் பழைய விசைப்படகை வாங்கி உள்ளனர். அதை பழுது நீக்கம் செய்து, பின்னர் மானிய டீசல் உதவியுடன் இவர்கள் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான 5 பேர் மீது கியூ பிரிவு போலீசாரால் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் குளச்சல் துறைமுக தெருவை சேர்ந்த ஜோசப்ராஜ்(55) என்பவரை கியூ பிரிவு போலீசார் நேற்று கைதுசெய்தனர். அவர் இலங்கை தமிழ் அகதிகள் விசைப்படகில் தப்பி செல்ல வசதியாக விசைப்படகு ஏற்பாடு செய்து ெகாடுத்தவர் மற்றும் விசைப்படகிற்கு தேவையான டீசல் மற்றும் பொருட்களை ஏற்பாடு செய்து கொடுத்தவர் என்றும் கியூ பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

More