வேலூரில் அதிர்ச்சி சம்பவம் போலீஸ்காரரின் வங்கி கணக்கில் கடன் வாங்கி நூதன மோசடி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் பிரபு. இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இதற்கிடையில், பிரபுவின் செல்போன் எண்ணிற்கு லிங்க் மூலம் குறுந்தகவல் வந்துள்ளது. அதில் உங்கள் வங்கி முடங்காமல் இருக்க கேஒய்சி புதுப்பிக்க வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து பிரபு, தனது சுய விவரங்களை பதிவு செய்துள்ளார். அதன்பிறகு அவரது செல்போனிற்கு வந்த ஓடிபி எண்ணை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் ரூ.80 ஆயிரம் வந்துள்ளது. பின்னர் சில நிமிடங்களில் அந்த பணம் எடுக்கப்பட்டதாக மற்றொரு குறுந்தகவல் வந்தது. வங்கியில் விசாரித்தபோது, உங்கள் கணக்கில் லோன் எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தவணை செலுத்த வேண்டும் எனக்கூறியுள்ளனர். புகாரின் பேரில் இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More