மாணவிக்கு டார்ச்சர் பேராசிரியர் கைது

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் டென்சிங் பாலையா (45). இவர் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில்  பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் பேராசிரியர் டென்சிங் பாலையா கைதானார். பின்னர் திருவில்லிபுத்தூர்  மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில் டென்சிங் பாலையா சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

More