தமிழகத்தில் 715 பேருக்கு கொரோனா: 12 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, மருத்துவம்  மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று    வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில்   நேற்று 1,01,818 பேருக்கு கொரோனா    பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 715    பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனாவால்     பாதிக்கப்பட்டோரின் மொத்த  எண்ணிக்கை 27,28,350 ஆனது. நேற்று   கொரோனாவில் இருந்து 748 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 26,83,691 ஆக உயர்ந்துள்ளது.     

கோவையில் 3 பேர், சென்னை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் தலா 2 பேர்,  தர்மபுரி, தஞ்சாவூர், விருதுநகர் மாவட்டங்களில் தலா ஒருவர் என 12 பேர்  உயிரிழந்துள்ளனர். இதுவரை 36,504 பேர் இறந்துள்ளனர். தற்போது மருத்துவமனை     மற்றும் வீட்டு தனிமையில்    இருப்பவர்கள் 8,155 பேர் அதிகபட்சமாக  சென்னையில் 123 பேர், கோவையில் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற  மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை  நூறுக்கும் குறைவாகவே    உள்ளது. இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More