கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு 4 மாவட்டங்களுக்கு 14 கோடி விடுவிப்பு: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நாள்தோறும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல், ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலையும் தடுத்து நிறுத்த தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், பல மாவட்டங்களில் கொரோனா இரண்டாம் அலையின்போது தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகங்கள் சார்பாக குறிப்பிட்ட தொகை செலவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், கோவை, சேலம், சிவகங்கை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்ட நிர்வாகங்களுக்கு கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதற்காக ரூ.14 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை, சுகாதார பணியாளர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவைகளுக்கான செலவுத்தொகையை ஒதுக்கியும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories:

More