தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் தேர்தல்: 6ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய தேர்தல் அதிகாரி மற்றும் பிற்படுத்தப்பட்டோர்,  மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ஆ.கார்த்திக் வெளியிட்ட அறிவிப்பு:   தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு, பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு தேர்தல் கால அட்டவணை 3.12.2021 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்தல் - 6.12.2021 (திங்கட்கிழமை, முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை), மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - 8.12.2021. வேட்பு மனு சரிபார்த்தல்- 9.12.2021.

வேட்பு மனு திரும்ப பெற கடைசி  நாள் - 10.12.2021. வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் நாள் - 13.12.2021. தேர்தல் அவசியமானால்  15.12.2021 அன்று ஓட்டுப் பதிவு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். தமிழ்நாடு வக்பு வாரிய அலுவலகம், நெ.1. ஜாபர்சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை-600 001ல் நடைபெறும்.   16.12.2021   தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

Related Stories: