எஸ்.சி, எஸ்.டி. நல ஆணையத்திற்கு அலுவலகத்தை ஒதுக்க வேண்டும்: முதல்வருக்கு பணியாளர் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்டி பணியாளர் சங்க மாநில தலைவர் டி.மணிமொழி, பொது செயலாளர் மகிமை தாஸ் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை: மாநில அளவில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் என்கிற புதிய அமைப்பு ஒன்றை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டமன்றத்தில் சட்டமியற்ற அதற்கான சட்ட முன்வடிவு வரைவை தாக்கல் செய்து, அந்த ஆணையத்திற்கு தலைவர், துணை தலைவர் மற்றும் 5 உறுப்பினர்களை நியமித்து ஆணை வெளியிட்டிருந்தார். பன்னெடுங்காலமாக தமிழகத்தில் மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் இல்லாதிருந்த நிலையில் ஆணையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்து கொடுத்தார். அந்த ஆணையத்துக்கு அலுவலகத்தை ஒதுக்கி தந்து ஆணையம் விரைந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: