3 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை ஆணைய இயக்குனராக இருந்த என்.சுப்பையன், ஆவின் இயக்குனராக நியக்கப்பட்டுள்ளார். ஆவின் இயக்குனராக இருந்த கே.எஸ்.கந்தசாமி, பேரிடர் மேலாண்மை ஆணைய இயக்குனராக நியமிக்கப்படுகிறார். முன்னாள் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More