திருமணம் செய்வதாக கூறி 4 பெண்களை பலாத்காரம் செய்து வீடு, பணம் பறித்த தொழிலதிபர்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அசோக் நகரை சேர்ந்த காஞ்சனா, அரும்பாக்கத்தை சேர்ந்த ஆனந்தி, தி.நகரை சேர்ந்த  தாட்சாயிணி, போரூரை சேர்ந்த பாக்கியலட்சுமி ஆகயோர் தனித்தனியாக புகார் மனு அளித்தனர். காஞ்சனா அளித்த புகாரில், ஆசோக் நகரில் சொந்த வீட்டில் வசிக்கிறேன். கடந்த 2016ல் எனது வீட்டின் கீழ் தளத்தில் வாடகைக்கு அலுவலகம் நடத்திய ஆனந்தராஜ், என்னை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்தார். மேலும், தனியாக தொழில் செய்ய வேண்டும் என்று கூறி எனது வீட்டை கிரையம் எழுதி வாங்கினார். பிறகு என்னைவிட்டு விலகிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார்.

பாக்கியலட்சுமி அளித்த புகாரில், என்னை ஆனந்தராஜ் காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்தார். ஆனால், திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுபற்றி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு, 2020ம் ஆண்டு வடபழனி கோயில் என்னை திருமணம் செய்தார். பின்னர், என்னிடம் 10 லட்சம் கேட்டு கொடுமைப்படுத்திவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

ஆனந்தி அளித்த புகாரில், வளசரவாக்கத்தில் ஒரு அழகு நிலையத்ைத ஆனந்தராஜ், தனது நண்பருடன் நடத்தினார். அங்கு நான் மேலாளராக வேலை செய்தேன். அப்போது, ஆனந்தராஜ், எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவரிடம் இருந்து தப்பி ஓடிவந்து விட்டேன். இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாட்சாயிணி அளித்த புகாரில், ஆனந்தராஜ் அலுவலக வாடகை கட்டிடத்திற்கு முன் பணமாக 1 லட்சம் கொடுத்தேன். இதை திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டார். இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தார்.

Related Stories: