வாலிபர் கொலையில் இருவர் பிடிபட்டனர்

பெரம்பூர்: சென்னை திரு.வி.க. நகரை சேர்ந்த ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர் மணிகண்டன் (35), கடந்த மாதம் 26ம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில், கார்த்திக், தீபக் (எ) ரஞ்சித் குமார், அய்யனார், சின்னசாமி மற்றும் 17 வயது சிறுவன் என 5 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பெரம்பூர் கென்னடி சதுக்கம் பகுதியை சேர்ந்த இளா (எ) லிங்கராஜ் (20), அதே பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (எ) ஜெமினியாஸ் (22) ஆகியோரை திரு.வி.க.நகர் போலீசார் தேடி வந்தனர்.

தனிப்படை போலீசார் கடந்த ஒரு மாதமாக இவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி மாதா கோயில் அருகே உள்ள ஒரு வீட்டில் இவர்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் அங்கு சென்று, லிங்கராஜ் மற்றும் ஜெகதீசனை கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories:

More