மகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது

சென்னை: வானகரம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் ராதா (35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) கணவரை இழந்த இவர், தனது 13 வயது மகள், 9 வயது மகனுடன் வசித்து வருகிறார். இதில், மகள் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றிய கற்பகக்கனி (32) என்பவருக்கும், ராதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதனையடுத்து, இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.  இந்நிலையில், ராதாவிதன் 9 வயது மகளுக்கு நீச்சல் கற்றுத் தருவதாக கூறி ஏரிக்கு அழைத்து சென்று கற்பகக்கனி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த ராதா,  திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தார். இதையறிந்த கற்பகக்கனி தலைமறைவானார். அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், நந்தபாக்கம் பகுதியில்  பதுங்கியிருந்த கற்பகக்கனியை நேற்று போலீசார் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். போக்சோவில் வாலிபர் கைது: பள்ளிக்கரணை பாலாஜி நகரில் பிரியாணி கடை நடத்தி வருபவர் ராஜா (33).  இவர், விதவை பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தியதுடன், அந்த பெண்ணின் 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.  இதுகுறித்து சிறுமியின் அத்தை கொடுத்த புகாரின்பேரில் போலீசார், ராஜாவை போக்சோவில் கைது செய்தனர். உடந்தையாக இருந்த தாயையும் கைது செய்தனர்.

Related Stories:

More