மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஆணையர் நியமிக்க வேண்டும்: அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் முக்கிய கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்து தீர்க்க, அவர்களின் உரிமைகளுக்காக மாநிலம் தழுவிய அளவில் செயல்படும் முக்கிய சங்கப் பிரதிநிதிகளை அவ்வப்போது அழைத்துப்பேசி தீர்க்க வேண்டும். மாத உதவித்தொகை அண்டை மாநிலங்களில் ரூ.3 ஆயிரத்திற்கும் மேல் வழங்கப்படுவதை சமீபத்தில் முதலமைச்சரிடம்  சுட்டிக்காட்டி, அதனை உயர்த்த வலியுறுத்தியதை நினைவூட்டுகிறோம். இயக்குனர் பதவியோடு சேர்த்து மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியாக தனி ஆணையரை மாநில அரசு நியமிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: