தமிழர்களிடையே வைரலாகும் வீராசாமி

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் வீராசாமி பெருமாள்(32). கரிபீயன் தீவு நாடுகளில் ஒன்றான கயானாவை சேர்ந்தவர். சுழல் பந்து வீச்சாளர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக  2012ம் ஆண்டு முதல் சர்வதேச ஆட்டங்களில் விளையாடத் தொடங்கினார். இதுவரை 6 டெஸ்ட்களில் விளையாடி 18 விக்கெட்களும், 7 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 8 விக்கெட்களும் எடுத்துள்ளார். உள்ளூர் ஆட்டங்களில் 729விக்கெட்கள் அள்ளியுள்ளார். நன்றாக விளையாடியும் அடுத்தடுத்து சர்வதேச ஆட்டங்களில் விளையாடும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடைசியாக விளையாடியது 2017ம் ஆண்டு. சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு  வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது. ஆனால் ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்போது இலங்கை சென்றுள்ள அணியிலும் இடம் பிடித்தார். முதல் டெஸ்ட்டில் வாய்ப்பு தரவில்லை. ஆனால் 2வது டெஸட்டில் ஆடுகிறார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்கள், 2வது இன்னிங்சில் 3 விக்கெட்கள் என  கிரிக்கெட் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். கூடவே உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இணையங்களில் ‘யார் இவர்’ என்று அதிகம் தேடும் வீரராக மாறியுள்ளார். காரணம் இவரது அழகான தமிழ்ப்பெயர். வீராசாமியின் தந்தை பெயர்தான் பெருமாள். வீராசாமியின் பெயர் மட்டுமல்ல இவரது உடன் பிறப்புகளின் பெயர்களும் தமிழர்கள் என்று சட்டென்று அடையாளம் காட்டும் பெயர்கள். ஆம் இவரது சகோதரர் பெயர் வீரப்பன். சகோதரிகளின் பெயர்கள் வீராயி, மாரியாயி .  

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தை விட்டு சென்றாலும் தமிழ் மரபுகளை மறக்காமல் இருக்கிறார்கள். ஆனால் பேசும் வாய்ப்பு குறைவு என்பதால் தமிழில் ஒரு சில வார்த்தைகள்தான் தெரிகிறது. ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்கள்.

Related Stories: