குறைந்த எடை; புதிய நிறம் புதிய வடிவம் பெறுகிறது ராணுவ வீரர்கள் சீருடை

புதுடெல்லி: இந்திய ராணுவம், 13 லட்சம் வீரர்களை கொண்ட பலம் வாய்ந்த படையாக உள்ளது. பாகிஸ்தான் எல்லை, சீன எல்லை, சியாச்சின் உச்சி என்று பல இடங்களில், இவர்கள் தற்போது அணியும் சீருடைகள், பணியாற்றும் இடங்களின் பருவநிலைக்கு ஏற்ப இல்லை என்ற கருத்து நிலவுகிறது. இதனால், பணியாற்றும் இடத்தின் பருவநிலைக்கு ஏற்றபடி, எடை குறைவாகவும், நேர்த்தியாகவும், புதிய நிறம், புதிய வடிவத்தில் சீருடை மாற்றப்பட இருக்கிறது.  இந்த சீருடை வடிமைப்பில் சட்டையை, பேன்ட்டுக்குள் ‘இன்சர்ட்’ செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. வீரர்கள் வகிக்கும் பதவியை வெளிப்படுத்தும் நட்சத்திரங்கள், பேட்ஜ்கள் மற்றும் அணிகலன்கள், புதிய சீருடையில் அப்படியே இருக்கும். கோடை, குளிர்காலம் ஆகிய 2 பருவங்களிலும் அணிவதற்கு ஏற்ற வகையில் எடை குறைவாகவும், இலகுவாகவும் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். ‘இந்த புதிய ஆடைகள் ஜனவரி 15ம் தேதி நடக்கும் குடியரசு தின ராணுவ தின அணிவகுப்பு பேரணியில் காட்சிப்படுத்தப்படும்,’ என்று ராணுவ உயரதிகாரி கூறியுள்ளார்.

* கடற்படை, விமானப்படை வீரர்கள் கடந்தாண்டே டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்ட சீருடைக்கு  மாற்றிவிட்டார்கள்.

* சீருடைக்காக ராணுவ அதிகாரிகள் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் சலுகைப்படி பெறுகின்றனர். இதில், ஷூக்களும் அடங்கும்.

* ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் நிறம் கொண்ட சீருடைகளை, மாநில போலீசார், சிறப்பு அதிரடிப்படைகளுக்கு வழங்க வேண்டாம் என்று மாநிலங்களை பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories:

More