மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை மீறி அணைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேறியது

புதுடெல்லி:  ‘அணைகள் பாதுகாப்பு மசோதா’வை மாநிலங்களவையில் ஒன்றிய அரசு திருத்தங்களுடன் நிறைவேற்றியது. நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ‘அணைகள் பாதுகாப்பு மசோதா-2019’, கடந்த 2019ம் ஆண்டு, ஆகஸ்ட்டில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், மாநிலங்களவைக்கு இது அனுப்பப்பட்டது. இது நேற்று விவாதத்துக்கு வந்தது. இதில் பல்வேறு திருத்தங்களை செய்யும்படி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரின. மேலும், மசோதாவை தேர்வுக்குழுவின் பரிந்துரைக்கு அனுப்பும்படியும் கோரின. ஆனால், இந்த கோரிக்கைக்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 80 வாக்குகள் பதிவாகின. இதனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, 2 திருத்தங்களுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில் ஒரு திருத்தத்தில், மசோதாவின் ஆண்டு 2019 என்பது 2021 ஆக மாற்றப்பட்டது. மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டதால், மக்களவையின் விவாதத்துக்கு மீண்டும் அது அனுப்பப்பட்டுள்ளது. 

Related Stories: