முல்லை பெரியாறில் தண்ணீர் திறப்பு உச்ச நீதிமன்றத்தில் புகார் செய்வோம்: கேரள அமைச்சர் ஆவேசம்

திருவனந்தபுரம்: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் மீண்டும் 142 அடி எட்டியதை தொடர்ந்து நேற்று மீண்டும் அணை  திறக்கப்பட்டது. பின்னர் நீர்மட்டம் குறைந்ததால், ஒரு மதகு  தவிர மற்ற அனைத்து மதகுகளும் மூடப்பட்டன. இதற்கிடையே, முன்னறிவிப்பின்றி  தண்ணீர் திறந்து விடப்பட்டதாக இடுக்கி மாவட்டத்தில் கொட்டாரக்கரை-  திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் அளித்த பேட்டியில், ‘‘முல்லை பெரியாறு அணையில் இருந்து முன்னறிவிப்பு  இல்லாமல் அணை திறக்கப்பட்டதால் ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. அணையை திறக்கும் போது முன்கூட்டியே  கேரள அரசுக்கு தமிழக அரசு தகவல் தெரிவிக்க வேண்டும். இரவு நேரங்களில் தண்ணீர்  திறக்க கூடாது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2 முறை அணை திறக்கப்பட்டபோதும் இந்த நடைமுறையை தமிழகம் பின்பற்றவில்லை. இது குறித்து உச்ச நீதிமன்றத்திலும், அணை கண்காணிப்பு குழுவிடமும் புகார்  செய்ய உள்ளோம்,’ என்றார்.

Related Stories: