அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில் மேலும் இது புயலாக வலுவடைந்து மத்திய வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் நிலைகொண்டு, ஆந்திரா - ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் வங்கக் கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவானது.

குறிப்பாக தற்போது நான்காவது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உருவான 3 காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கன மழை கொட்டி தீர்த்தது. இன்று காலை வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி ஜாவத் புயல் வடக்கு ஆந்திரா தொடங்கி தெற்கு ஒடிசாவுக்கு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ஆந்திரா, ஒடிசா கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

More