கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியது: சேலத்தில் ஸ்டார் விற்பனை தீவிரம்

சேலம்: இயேசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா உச்ச கட்டத்தில் இருந்ததால், எளிமையான முறையில் கொண்டாட்டங்கள் நடந்தன. இந்த ஆண்டு மிகவும் உற்சாகத்துடன் கிறிஸ்து மஸ் பண்டிகையை ெகாண்டாட ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்களின் வீடுகளிலும், ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுப்படுத்தும் வகையில் இந்த குடிலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

அதே போல கிறிஸ்துமஸ் மரம் அமைத்து அதை மின்விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை மற்றும் பரிசு பொருட்கள், பலூன்களை கிறிஸ்துமஸ் மரத்தில் கட்டி தொங்க விடுவார்கள். டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே கிறிஸ்து மஸ் கொண்டாட்டங்கள் தொடங்கும். அதன்படி, தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. இதற்காக இப்போதே வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் மரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இயேசு பிறந்த இடத்தை வால் நட்சத்திரம் அடையாளம் காட்டி யது. அதை குறிக்கும் வகையில் வீடுகளில் ஸ்டார்கள் தொங்க விடப்படும். இதையொட்டி, சேலம் செவ்வாய்பேட்டை, கடைவீதிகளில் பல விதமான வண்ணங்களில், வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

இவை மும்முரமாக விற்பனையாகிறது. குடில் அமைக்கும் பொருட்களும் இந்த ஆண்டு பலவித அளவுகளில் கண்ணை கவரும் விதத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா பவனி தொடங்கியுள்ளது. இனிமையான பாடல்களை பாடியபடி வீடுகள்தோறும் சென்று கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கி வாழ்த்துக்கள் கூறுகின்றனர். கிறிஸ்தவ ஆலயங்களும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. பல கிறிஸ்தவ ஆலயங்களின் கட்டிடங்கள் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும், ஏராளமான ஸ்டார்களால் தோரணங்கள் தொங்க விடப்படுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. கிறிஸ்துமஸ் ெகாண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் உற்சாகம் அடைந் துள்ளனர்.

இதுகுறித்து சேலத்தை சேர்ந்த கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனையாளர்கள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா விற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பல வகைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார், கலர் ஜிகினா பேப்பர், வாழ்த்து அட்டை உள்பட பல்வேறு பொருட்களை விற்பனைக்கு வைப்போம். அதன்படி தற்போது ஸ்டார் உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளோம்.விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. கிறிஸ்துமஸ் நெருங்கும் வேளையில் விற்பனை நல்ல முறையில் இருக்கும். ஸ்டார் ₹50 முதல் ₹200 வரை விற்பனை செய்யப்படுகிறது’’ என்றனர்.

Related Stories: