கொடிநாள் நிதிக்கு அதிக பங்களிப்பு வழங்கியதற்காக சன் டி.வி.க்கு பாராட்டு!: காவேரி கலாநிதி மாறனுக்கு ராஜ்நாத் சிங் கவுரவம்..!!

டெல்லி: கொடிநாள் நிதிக்கு அதிக பங்களிப்பு வழங்கியதற்காக சன் டி.வி.க்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக கொடிநாள் நிதி வசூலிக்கப்படுகிறது. டெல்லி விமானப்படை ஆடிட்டோரியத்தில் கொடிநாள் நிதி வழங்கிய நிறுவனங்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், ராணுவ கொடிநாள் நிதிக்கு அதிக பங்களிப்பு செய்த நிறுவனங்கள் கவுரவிக்கப்படுகின்றன. அதிக நிதி அளித்த நிறுவன நிர்வாகிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கவுரவித்தார்.

அந்த வகையில், கொடிநாள் நிதிக்கு அதிக பங்களிப்பு வழங்கியதற்காக சன் டி.வி.க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டிலேயே அதிக கொடிநாள் நிதி அளித்த 2வது நிறுவனம் சன் டிவி ஆகும். சன் டிவி சார்பில் கடந்த ஆண்டு கொடிநாள் நிதியாக ரூ.5 கோடி வழங்கப்பட்டது. 2021ம் ஆண்டு கொடிநாள் நிதியாக சன் டிவி ரூ.1 கோடி அளித்துள்ளது. இந்நிலையில், கொடிநாள் நிதிக்கு அதிக பங்களிப்பு வழங்கியதற்காக சன் டிவிக்கு கவுரவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

சன் டிவி சார்பில் விழாவில் பங்கேற்ற காவேரி கலாநிதி மாறனுக்கு ராஜ்நாத் சிங் கவுரவம் செலுத்தினார். ராணுவத்தினரின் தியாகத்தை போற்றும் வகையில், டிசம்பர்  7ம் தேதி, நாடு முழுவதும் படை வீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது. கொடி விற்பனை வாயிலாக திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நலவாழ்விற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்விற்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More