கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் பயனற்று கிடக்கும் தள்ளு வண்டி காய்கனி விற்பனை கடைகள்

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் இயங்கும் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பாக கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பயனாளிகளை தேர்வு செய்து காய்கனி விற்பனை நகரும் வண்டியை தோட்டக்கலை அலுவலர்கள் வழங்கினர்.

வண்டியை பெற்றுக்கொண்ட பயனாளிகள் பயன்படுத்தாமல் பேருந்து நிலையம் அருகே வைத்துள்ளனர். பயன் இல்லாமல் உள்ள நகரும் காய்கனி வண்டிகளை பயனாளிகளிடம் கூறி பயன்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் வலியுறுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

More