தமிழ்நாட்டில் டிசம்பரில் வழக்கத்தை விட 132% அதிக மழைப்பொழிவு காணப்படும் : இந்திய வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நடப்பு டிசம்பர் மாதத்தில் வழக்கத்தை விட 132% கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டிசம்பர் மாதத்திற்கான மழை மற்றும் வெப்பநிலை கணிப்பை அந்த மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தென் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வழக்கத்தை விட கூடுதல் மழை பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா, கேரளா, தெற்கு கர்நாடகா ஆகிய இடங்களில் வழக்கத்தை விட 132%கூடுதல் மழைப் பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடமேற்கு பகுதிகளிலும் மத்திய இந்தியாவின் சில இடங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் டிசம்பரில் வழக்கத்தை விட குறைவான அளவிலேயே மழை பெய்ய கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: