×

ஓமிக்ரான் புதிய வகை கொரோனா... கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி வழங்கக் கோரி சீரம் நிறுவனம் விண்ணப்பம்!!

மும்பை : கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி வழங்கக் கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன. ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியும் பூஸ்டர் டோஸை மக்களுக்கு செலுத்த அனுமதி வழங்க கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் பூஸ்டர் டோஸ் செலுத்துவது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன், பூஸ்டர் டோஸ் தேவையா என்பது பற்றி நிபுணர் குழு ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளார்.


Tags : Gowishfield , கோவிஷீல்டு
× RELATED தமிழகத்துக்கு 1.08 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை