ஓய்வு பெற்றார் கோன்டா

இங்கிலாந்து டென்னிஸ் வீராங்கனை ஜோகன்னா கோன்டா (30), தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.   காயம், அறுவை சிகிச்சை காரணமாக  போட்டிகளில் பங்கேற்பதில் சிரமப்பட்டு வந்ததால் உலக  தரவரிசையில் 4வது இடத்தில் இருந்து 113வது இடத்துக்கு  தள்ளப்பட்டார். பிரிட்டனின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான கோன்டா, 4 கிராண்ட் ஸ்லாம்  போட்டிகளிலும் தலா ஒருமுறை அரையிறுதி வரை முன்னேறியுள்ளார். டபுள்யூடிஏ தொடர்களில் 4 முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

Related Stories:

More