சில்லி பாயின்ட்...

* என்  மனமும், உயிரும் பெங்களூரு அணியில் தான் இருக்கும். என்னை அவர்கள்  தொடர்பு கொண்டபோது, எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. மேலும் 3  ஆண்டுகளுக்கு இந்த அற்புத பயணம் தொடரும் - விராத் கோஹ்லி (பெங்களூரு).

* ராகுலை  தக்க வைக்க விரும்பினோம். அவர் ஏலத்தில் பங்கேற்க விரும்பினார்.  ஆனால், அதற்கு முன்பே இன்னொரு அணியிடம் பேசியது தர்மமல்ல - பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம்.

* சில மாதங்களுக்கு முன்பு  அடுத்த கேப்டன் யார் என்ற  கேள்விக்கு, ‘7க்கு (தோனியின் சீருடை எண்) பிறகு 8 தானே (ஜடேஜாவின் சீருடை எண்)   வரும்’ என்றார் ஜடேஜா. அதற்கு ஏற்ப  தோனியை (ரூ12 கோடி) விட அதிக விலைக்கு  ஜடேஜாவை (ரூ16 கோடி) இப்போது சென்னை அணி தக்கவைத்துள்ளது. அதனால்வரும்  சீசனில் கேப்டனும் மாறுவரா என்று கேள்வி எழுந்துள்ளது.

* ஆர்சிபி குடும்பத்தில் என்னை தக்க வைத்ததுக்கு நன்றி. உண்மையில் நான் கவுரவிக்கப்பட்டுள்ளேன் - முகமது சிராஜ் (பெங்களூர்).

* காலே மைதானத்தில் நடந்து வரும் 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 204 ரன்னிலும், வெஸ்ட் இண்டீஸ் 253 ரன்னிலும் ஆல் அவுட்டாகின. 49 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன் எடுத்துள்ளது. இன்று 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

* டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர் தரவரிசையில் வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் (412 புள்ளி), இந்தியாவின் ஜடேஜா (353 புள்ளி), ஆர்.அஷ்வின் (352 புள்ளி) முதல் 3 இடங்களில் உள்ளனர். பவுலிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் (908), ஆர்.அஷ்வின் (840), டிம் சவுத்தீ (நியூசி. 839) முன்னிலை வகிக்கின்றனர். பும்ரா 763 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார். பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் ரோகித் (805), கோஹ்லி (775) முறையே 5வது, 6வது இடத்தில் உள்ளனர்.

* பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் பதவி விலகியுள்ளார்.

Related Stories:

More