×

‘தல’ என அழைக்காதீங்க: ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்

சென்னை: ‘தல’ என்று தன்னை அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் அஜித்துக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ரசிகர் மன்றங்களால் இளைஞர்களின் உழைப்பும், நேரமும் வீணாவதாக கருதிய அஜித், மன்றங்களை கலைத்து விட்டார். ரசிகர்கள் அவரை அல்டிமேட் ஸ்டார் என்று அழைத்தார்கள். திரைப்படங்களின் டைட்டிலிலும் அவ்வாறு குறிப்பிடப்பட்டார். அதையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். தற்போது அவரை ரசிகர்கள் ‘தல’ என்று அழைக்கிறார்கள்.

இப்போது அதையும் வேண்டாம் என தெரிவித்துள்ளார். அஜித் நடித்த தீனா படத்தில் அவருடன் நடித்தவர்கள் அவரை ‘தல’ என்று அழைப்பார்கள். பின்னர் ரசிகர்களும் அப்படியே அழைக்கத் தொடங்கினார்கள். இதுதொடர்பாக, அஜித் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரும் மதிப்பிற்குரிய ஊடக, பொதுஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏகே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ, வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மனநிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

Tags : Tala ,Ajith , Don't call it 'Head': Ajith appeals to fans
× RELATED வலிமை வெளிவரும் முன்பே அஜீத்தின் அடுத்த பட பணிகள் தொடங்கியது