விதிகளை மீறி இயக்கிய ஆட்டோக்கள் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி

திருவள்ளூர்: திருவள்ளூர், ராக்கி தியேட்டர் அருகில் ஆட்டோக்களை வரிசையில் நிறுத்தி வைத்து ஆட்களை ஏற்றுவதால் சாலையில் நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக, பொதுமக்கள் தொடர்ந்து, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வட்டார போக்குவரத்து அலுவலர் சு.மோகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கா.பன்னீர்செல்வம், கோ.மோகன் ஆகியோர் நேற்று திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது எப்.சி. இல்லாதது மற்றும் வெளியூர் வாகனங்கள் திருவள்ளூர் பகுதியில் விதிகளை மீறி இயக்கியது உள்பட பல்வேறு காரணங்களுக்காக 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த வாகனங்களுக்கு 45 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் கூறுகையில், ஆட்டோக்களை பர்மிட் படி அந்தந்த அலுவலக எல்லையில் மட்டுமே இயக்க வேண்டும். மீறி தத்தம் அலுவலக எல்லையை மீறி தாண்டி னால், அனுமதிக்கு புறம்பான இயக்கமாக ஆகி ரூ5 ஆயிரம் முதல் ரூ10 ஆயிரம் வரை இணக்க கட்டணம் அல்லது வாகன சிறைப்பிடிப்பு நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என்றார்.

Related Stories:

More